search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரதா நிதி நிறுவன மோசடி"

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். #CBIgrills #KolkataPoliceCommissioner #Sharadascam
    ஷில்லாங்:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு குழுவை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமைத்தார். ஆனால், இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கின் முக்கிய ஆவணங்களை ராஜீவ்குமார் அழித்து விட்டதாக குற்றம்சாட்டினர்.

    இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 3-ந்தேதி கொல்கத்தாவுக்கு வந்தனர். மேற்கு வங்காளம் மாநில போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி 3 நாட்கள் தர்ணாவில் ஈடுபட்டார்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது கடமையை செய்யவிடாமல் கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



    இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ராஜீவ் குமாருக்கு கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டது. மேகாலாயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகர சி.பி.ஐ. அலுவலகத்தில் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஷில்லாங்கில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ராஜீவ் குமார் நேற்று ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ராஜீவ் குமார் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது ராஜீவ் குமாரின் வக்கீல் பிஸ்வஜித் தேப்பும் உடன் இருந்தார். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதே சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. குணால் ஜோஷுக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி அவர் இன்று ஆஜரானார். அவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரையும், முன்னாள் எம்.பி.யையும் நேருக்கு நேர் வைத்து ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி வருவதாக ஷில்லாங்கில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #CBIgrills #KolkataPoliceCommissioner #Sharadascam
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று மேகாலயாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். #SaradhaScam #KolkataCommissioner #CBI
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பியது. அவர் தொடர்ந்து ஆஜராகாத நிலையில், சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று சிறிது நேரம் விசாரித்து விட்டு பின்னர் விடுவித்தனர்.

    சிபிஐ அதிகாரிகள் தடுக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.



    இதையடுத்து, கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் பிப்ரவரி 9-ம் தேதி விசாரணை நடத்துவதற்காக சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து கமிஷனர் ராஜீவ் குமார் நேற்றே ஷில்லாங் வந்து சேர்ந்தார். அவருடன் மாநில போலீஸ் அதிகாரிகள் 3 பேர் வந்தனர். இதேபோல் சிபிஐ தரப்பில் கமிஷனரிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து 10 அதிகாரிகள் நேற்றே ஷில்லாங் வந்து சேர்ந்தனர்.

    இன்று சிபிஐ அலுவலகத்தில் கமிஷனர் ராஜீவ் குமார் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாரதா நிறுவன மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக, கமிஷனரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதற்கிடையே, சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே திரண்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SaradhaScam #KolkataCommissioner #CBI
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
    சென்னை:

    கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

    இதற்கிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
    கொல்கத்தா:

    கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். 

    இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இதற்கிடையே, ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

    இந்நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
    நாட்டையே உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் கொல்கத்தா அலுவலகத்தில் ஜூன் 20-ம் தேதி ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. #EnforcementDirectorate #saradhachitprobe #nalinichidambaram
    புதுடெல்லி:

    மேற்கு வங்க மாநிலத்தில் நிறுவப்பட்ட சாரதா நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து மீண்டும் அவர்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ஈடுபட்டிருந்ததால் அம்மாநிலத்தின் ஆட்சியே ஆட்டம் கண்டது.

    இந்த வழக்கு தொடர்பாக சாரதா நிதி நிறுவனத்தின் நிறுவனர் சுதீப்சா சென் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் மத்திய மந்திரியின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்தின் பெயர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தது. சாரதா சிட் பண்டு நிறுவனத்திடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோரஞ்சனா சிங் என்பவருக்கு அளிக்கப்பட்ட பண விவகாரத்தில் நளினி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.



    முன்னதாக, ஏப்ரல் 7-ம் தேதி அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜரானார்.

    இதையடுத்து, ஜூன் 20-ம் தேதி கொல்கத்தா அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. #EnforcementDirectorate #saradhachitprobe #nalinichidambaram
    ×